Saturday, March 3, 2018

கறிவேப்பிலையை அப்படியே சாப்பிடுவது ஆரோக்கியம்


கறிவேப்பிலையை அப்படியே சாப்பிடுவது ஆரோக்கியம்

கறிவேப்பிலையை அப்படியே சாப்பிடுவது ஆரோக்கியம்
நான்கு மாதங்கள் தொடர்ந்து கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டால் மந்திர மாற்றங்கள் ஏற்படும்.
 பொதுவாக உணவில் நறுமணத்துக்காகவும் சுவைக்காகவும் சேர்க்கப்படும் கறிவேப்பிலையை அனைவரும் அசட்டையாக தூக்கி எறிந்து விடுவோம். ஆனால் அந்த கறிவேப்பிலையை நன்கு கழுவி தினமும் காலையில் வெறும் வயிற்றில் பச்சையாக சாப்பிட்டு வந்தால் என்ன நன்மைகளெல்லாம் கிடைக்கும் என்று தெரியுமா?

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 2, வைட்டமின் சி, கால்சியம், இரும்புச்சத்து போன்றவை வளமாக நிறைந்துள்ளன. கறிவேப்பிலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என்று பலர் சொல்ல கேட்டிருப்போம். ஆனால் அதனை பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தொடர்ந்து 120 நாட்கள் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் உடலில் பல்வேறு நன்மைகள் உண்டாகும்.

காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம். ரத்தச் சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரீச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்தச் சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து ரத்த சோகை நீங்கும். சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைப்பதோடு, நல்ல கொழுப்பை அதிகரித்து, இருதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சினையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும். நீண்ட நாட்கள் செரிமான பிரச்சினையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சினைகள் நீங்கிவிடும். கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

சளித்தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், சளி முறிந்து வெளியேறிவிடும். கறிவேப்பிலை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுகள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி, கல்லீரலை பாதுகாப்பதோடு சீராக செயல்படவும் தூண்டும்.

No comments:

Post a Comment

Featured

Electrical Engineer Job Vacancies

Title: Exciting Opportunity: Electrical Engineer Position Available in Kuwait with JaiWin Tradez & Serviz Are you an experienced Electri...