Sunday, June 30, 2019

Nurses Registration & Tracking System [NRTS]

Nurses Registration & Tracking System 

  • Free Enrolment of Nurses- Hassel free registrations and Linked with Aadhar- Biometric Authentication 
  •  Simplified Registration and has integrated uniform system across the county  Candidates getting NUID Card will get the incentive of 30 hours of CNE for the first time
  •  Empower Nurses with National Unique Identity Number (NUID) 
  •  Facilitate for effective manpower planning for policy makers at State and National Level. 
  •  Uniform issuance of Nurse Passbook comprising of complete history of Nurse Midwifery. 
  •  Renewal of licence once in five years linked with 150 hours of Continuing Nursing Education (CNE)
Click below the link to enter.......

SOURCE: INDIAN NURSING COUNCIL WEBSITE

Saturday, June 29, 2019

MRB NURSES RESULT - UPDATED 2019

CLICK HERE TO FIND RESULTS...

>>>>>>>>>>RESULTS<<<<<<<<<<<<

TOTAL VACANCIES 2345

congratulations to you all......
Nursing OFFICERS

Thursday, June 6, 2019

Tamilnadu Nursing Status

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் அயல்நாட்டில் !!!!

ஒரு செவிலியராக எனது பதில்:-
ஆண்டிற்கு இலட்சத்திற்கும் மேல் பணம் செலுத்தி ,செய்முறை மற்றும் விளக்கத்தில் தேர்ச்சி பெற்று ,செவிலியனாக பதிவுசெய்து 2006-ம் ஆண்டு சென்னையில் ஒரு பிரபல இதயம் மற்றும் பல்நோக்கு சிகிட்சை மருத்துவமனையில் 4000 ரூபாய் முன்பணமாக செலுத்தி (3 மாதங்களில் திருப்பி தரப்பட்டது)செவிலியர் துறையில் இணைந்தேன்,அன்று ஊதியமாக 3000  ரூபாய் வழங்கப்பட்டது இதில் 500 ரூபாய் உறைவிடத்திற்காக பிடிக்கப்படும் ,பணியிலிருக்கும் நேரத்தில் உணவு சலுகை விலையில் கிடைக்கும் ,பயணசெலவு நாம் தான் செய்யவேண்டும் ஆக மாதம் கையில் மீதமிரூப்பது சில நூறுகள் தான் இதில் கல்விக்கடன் செலுத்துவதா பெற்றோருக்கு கொடுப்பதா ?
இருவருடங்கள் அனுபவம் பெற்றபின் ஊதியம் 4000 ஆனது இதற்குள் சென்னையின் விலைவாசி எங்கே உயரத்தில் போய் விட்டது ,தாய்நாட்டில் பணி செய்யவேண்டும் அயல்நாட்டு பணியே வேண்டாமென்ற எனது குறிக்கோளில் ஒரு கேள்வி எழுந்தது ,அன்று மாநில அரசு பணியில் தனியார் செவிலியர்களுக்கு இடமில்லை , மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பித்து  வடநாட்டிற்கு சென்று சிலமுறை முயற்சி செய்தேன் எதுவும் கைகூடவில்லை , தமிழ் நாட்டில் ஊதியம் மட்டும் உயரவில்லை வேலை பளுவும் ,கேலி பேச்சுக்களும் நாளுக்குநாள் பெருகியது எந்த அரசும் கண்டுகொள்ளவில்லை செவிலியர்கள் என்ற இனத்தையே யாரும் கண்டுகொள்ளவில்லை அடிமையை போல பல நேரங்களில் நினைத்ததுண்டு..
இவை அனைத்திற்கும் பிறகு அயல்நாட்டு பணிக்கு விண்ணப்பிக்கலாம் என எத்தனித்து ,என் தாய்நாட்டின் ஒரு மாவட்டத்தின் பரப்பளவை விட குறைவான,எந்த வித வளங்களுமற்ற (மீன் வளத்தை தவிர) ஒரு தீவு நாட்டில் பணியை தொடங்கினேன் ,வேலை பளுவும் குறைவு நேரமும் குறைவு  பணியில் ஆறுதல் கிடைத்தது ஊதியமும் இலட்சத்திற்கு அருகில் கிடைக்கிறது....
 எல்லா வளங்களையும் கொண்ட என் தாய்நாட்டில் செவிலியனுக்கு ஊதியமில்லை ஒரேவளத்தை நம்பியுள்ள சிறிய  ஒரு நாட்டில் ஊதியமுண்டு , இப்போது என்ன பதில் சொல்வது
தாய்நாட்டில் செவிலியர்களுக்கு மரியாதை கூட இல்லை அத்தனை பழியும் இகழ்ச்சியும் செவிலியர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

பல முயற்சிகளுக்குப் பிறகு இப்போது மாநில அரசு பணியில் செவிலியர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டது ஆனால் அதிலும் நஞ்சை வைத்து கொடுக்கிறார்கள், தனியார் துறையில் ஊதியம் பெருநகரங்களில் மட்டும் உயர்ந்துள்ளது அதுவும் விலைவாசி உயர்வை விட குறைவு ,இன்றும் உள் மாவட்டங்களில் செவிலியர்களுக்கு ஊதியம் 4000 ஐ தாண்டவில்லை !!!
  அனைவரும் பெருநகரங்களில் வசிப்பது சாத்தியமல்ல , இத்தனை இன்னல்களிலும் தாய்நாட்டு மக்களுக்கு செவைசெய்யும் குறிக்கோளோடு வாழும் செவிலியர்கள் அதிகம்... (தன்னலம் கருதாமல்)
அயல்நாட்டில் இருப்பவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் என சொல்ல வில்லை என்றாவது தாய்நாட்டில் அவலநிலை மாறும் நாங்களும் குடும்பத்தினருடன் வசித்து செவிலிய பணியை தாய்நாட்டில் செய்யலாம் என்ற ஆசையிலே பலரின் வாழ்க்கை நகர்கிறது.....
எல்லா வளமும் இருந்தும் அயல்நாட்டில் கையேந்த வைத்த மத்திய மாநில அரசுகளுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் ,ஊழல் பெருச்சாளிகளுக்கும் நன்றி......



Saturday, June 1, 2019

Hall Ticket Nurses in Sick Newborn Care unit

Hall Ticket Download
Nurses in Sick new born care unit
என்ற பிரிவின் கீழ் விண்ணப்பித்த செவிலியர்கள் தங்களது நுழைவுச்சீட்டை கீழ்க்கண்ட இணைய இணைப்பிலிருந்தோ அல்லது இணைய தளத்திலிருந்தோ பதிவிறக்கம் செய்யலாம்.
தேர்வு நாள் - 9:6:2019

Click here👇👇👇👇
Download Hall Tickets

பகிர்க ! பயனடைக!
வாழ்க வளமுடன்!

Wednesday, May 1, 2019

May Day wishes

பிணி காலத்திலும் ; 
பணியென்று பாராமல் ; 
நலம் விசாரித்து ! 
மனச்சுமையை போக்கி ! 
காயம்பட்டோரை- 
கண்மணியாய் காத்து ! 

ஆறுதல் மொழி பேசி; 
அன்பை மருந்தில் கலந்து ! 
தளர்ந்த மனதை - 
தாயுள்ளத்தோடு வருடி ; 
தன்னலமற்ற சேவையில் 
தனக்குநிகர் உண்டோ? என - 

செய்யும் தொழிலையும் 
சேவையாய் செய்கின்ற ; 
நீங்கள் தானே 
மனிதரில் 
புனிதர் !

ACLS and BLS

NAGERCOIL classes

ACLS and BLS

Chennai classes 

Saturday, March 16, 2019

அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு ! இன்றைய சமுதாயம்!!!???

தமிழ் சமுதாயத்தின் இன்றைய பரிணாமங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது மறதி என்ற ஒன்றே என சொன்னால் ஆச்சரியம் ஒன்றும் இல்லை ஏனென்றால் ஓரிரு நாட்களில் எதையும் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவார் ,ஏன் ? எப்படி ? யாரால்? எதற்காக? என்ற கேள்விகள் எழுந்தாலும் நமக்கென்ன என கடந்து செல்பவர்களே அதிகம்.

  ஆகவேதான் பல முறை எமது பதிவுகளில் பின்வரும் கருத்தை குறிப்பிட்டுள்ளோம்
'தனக்கு நடக்காது எல்லாமே ஒரு செய்தி மட்டுமே'
   தினம் தினம் நம் வாழ்வில் பல வினோதமான செய்திகளையும்,காட்சிகளையும் கண்டும் கேட்டும் கடந்து செல்கிறோம் ,என்றாவது அதன்  மூலக்காரணத்தை ஆராய்ந்ததுண்டா?
அதன் பின்னணி என்னவாயிருக்கும் என்றாவது யோசித்ததுண்டா ? இல்லை எனில் நம்மை இதுபோன்ற விசயங்களிலிருந்து தற்காத்து கொள்வது என்றாவது யோசித்தது உண்டா ?  இதுவரை இல்லை எனில் இனியாவது அவ்வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம் ஏனெனில் முன்பைவிட இக்காலம் மிக மோசமான இலக்கை நோக்கி பயணிக்கிறது எனவே நாம் முன்பைவிட அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.......
     எங்கும் எதிலும் இணையத்தின் ஆதிக்கமும் சமூக வலைதளங்களின் ஆதிக்கமும் ஓங்கி நிற்கும் காலமிது , பொழுதுபோக்கு க்காக துவங்கும் பல விடயங்கள் விஷமாக மாறி பல உயிர்களையும் உறவுகளையும் காவு வாங்கும் காலமிது . சமூகவலைத்தளங்களில் நம்மை பின்பற்றும் அனைவரும் நம் நண்பர்கள் அல்லது நம் உறவுகள் எனும் தவறான புரிதலை நாம் களைந்து சில கண்காணிகளும் களவாணிகளும் இருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும்  முதலில் அனைத்து நட்பு விண்ணப்பங்களையும் அங்கீகரிப்பதை தவிர்க்க வேண்டும் அல்லது முடக்க வேண்டும் இல்லையெனில் சில விஷமிகள் உங்களை வேவுபார்கவும் இன்னல் படுத்தவும் ஏதுவாக அமையும்,ஆண்களும் பெண்களும் சம அளவில் சமூக வலைதள பயன்பாட்டால் பாதிப்டைந்தாலும் அதிக அளவில் அவதிக்குள்ளாவது பெண்கள் என்பதை நான் சொல்லி அறியவேண்டிய அவசியமில்லை , மிகவும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துங்கள்.
  ஆணாலும் சரி  பெண்ணானாலும் சரி கைபேசி பயன்பாட்டையும் அதன் மென்பொருள் பயன்பாடுகள் மற்றும் முறைகேடுகளையும் நன்கு புரிந்து செயல்படுங்கள் சில மென்பொருட்கள்(SOFTWARE)நம் தகவல் மற்றும் புகைப்படங்கள் அனைத்தையும் திருடும் அளவு தொழில்நுட்ப கட்டமைப்பு கொண்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.. உங்கள் அனுமதி இல்லாமலே உங்கள் கணிணி அல்லது கைபேசியின் கேமராவை இயக்கவும் அதை நகலெடுக்கவும் முடியும் .

இதைவிட மிகவும் கொடுமையானது என்னவென்றால் நம்பிக்கை துரோகம்,நண்பன்,காதலன்,காதலி, சேவகர்,முதலாளி,காப்பாளன், உறவினர்கள் என்ற பெயரில் நமக்கு தீங்கு விளைவிக்கும் மனித டிராகுலாக்கள் .எந்த உறவுக்கும் ஒரு எல்கை உண்டு அந்த எல்லையை மீறும் போது அதை கண்டிப்பதும் நம்பிக்கைகுரியவர்களின் கவனத்தில் கொண்டு செல்வதும் அவசியம்,அம்மா,அப்பா,கணவன்,உடன் பிறந்த சகோதரர் -களை அணுகுவது நல்லது ஏனென்றால் வேறு சிலர் இதை தவறான முறையில் பயன்படுத்த நேரிடும் .
நடை உடை பாவனை அனைத்திலும் கண்ணியமாக இருக்கவேண்டும் பெற்றோரை, நண்பர்கள், சகோதரர்கள், உறவுகள், துணை -யை ஏமாற்றுவதாக நினைத்து அன்று சந்தோஷபட்ட பல பேர் இன்று வாழ்கையை தொலைத்தும் பலவற்றை இழந்தும் போனதை அனைவரும் அறிந்ததே இருந்தும் இன்றும் நாகரீகம் என்ற பெயரில் பல சேட்டைகளையும் ,துரோகங்களையும் பல பேர் செய்வதையும் அதனால் தானும் தன்னை சேர்ந்தவர்களையும் மன உளைச்சலுக்குள்குவதும் நடந்துகொண்டேதான் இருக்கிறது.
  இதை பார்த்துக்கொண்டும் கவனித்துகொண்டும் இருக்கும் வருங்கால இளைஞர்கள் அதாவது இன்றைய சிறார்கள்!!!! அவர்கள் என்னவெல்லாம் அரங்கேற்றப் போகிறார்களோ என்பதை நினைத்தால் சற்று பயமாகத்தான் இருக்கிறது , நாளைய சமுதாயத்தின் நலனை காக்க இன்றைய மனிதர்கள் ஆக்கப்பூர்வமான நல்ல விதைகளை சிறார்களிடம் விதைக்க வேண்டும் அவர்களின் செயல்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.பணமீட்டுவது மட்டுமே நமது குறிக்கோளாயிராமல் இச்சமுதாயத்திற்கு நல்ல தலைமுறைகளை உருவாக்குவதிலுமிருக்கவேண்டும் .
தவறுகளை கண்டால் கண்டியுங்கள் ,கண்ணை மூடாதிருங்கள் . ஒருவருக்கொருவர் உதவுங்கள் சுமைகள் குறையும் படி....

Wednesday, March 13, 2019

நீங்கள் மத்திய மாநில அரசு மருத்துவமனையில் செவிலியராக முயற்சிப்பவரா? பயிற்சி வகுப்புகளுக்காககாத்திருப்பவர்களா?


செவிலிய நட்புகளே தற்போது மத்திய மாநில அரசுகளின் மருத்துவமனைகளில் அதிகமான வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதை அறிவோம்.இதில் விதிமுறைகள் இலகுவாக இருப்பினும் தேர்வில் கடுமையான போட்டிகள் இருந்துகொண்டே தான் இருக்கிறது,ஏனென்றால் டிப்ளமோ நர்சிங் முதல் முதுநிலை செவிலியர்கள் வரை விண்ணப்பிக்கிறார்கள் கல்வியை பொறுத்தவரை கற்க கற்க புலமையடைவோம் , பட்டம் மற்றும் முதுநிலை செவிலியர்கள் அதிகமான மதிப்பெண்கள் பெற வாய்ப்புகளும் இருப்பதால் தேர்வு வினாக்களுக்கு சற்று கடினமாகவே இருக்கும் .
நம்மில் பலர் கல்லூரி படிப்பை முடித்த பிறகு நாம் பணிபுரியும் குறிப்பிட்ட பிரிவில் மட்டுமே கவனத்தை செலுத்துவதும் அது சம்பந்தமான அறிவை வளர்பதுமேதான் நம் இயல்பு .(For example if we working in ICU means we will be updated on ICU related knowledge ,same way all the other departments we are not trying to update all departments ,the need also less )ஆனால் இது போன்ற போட்டி மற்றும் தகுதி தேர்வுகளில் அனைத்து பிரிவுகளிலிருந்தும் வினாக்கள் கேட்கப்படும் ஆகவே முறையான பயிற்சியும் அவசியம்.
     சிலர் எளிதில் புரிந்து கொள்ளும் திறமை படைத்தவர்கள்,சிலர் சிறிது தாமதமாக புரிந்து கொள்ளும் திறமை படைத்தவர்கள் ஆகவே தங்கள் திறமைக்கேற்றவகையில் பயிற்சியும் அவசியம்.நன்றாக படித்து தேர்வில் வெற்றி பெற்று பின் வரும் செவிலிய சந்ததிக்கும் வழிகாட்டியாக இருக்க வாழ்த்துக்கள்.

    இது விளம்பர நோக்கத்திற்காக அல்ல
எமது தோழமை பயிற்சி நிறுவனமான
Target Nurses Academy  மிகசிறந்த பயிற்சி வகுப்புகளை தமிழ்நாடு முழுவதும் நடத்தி வருகிறது குறைந்த கட்டணத்தில் மிகச்சிறந்த ஆசிரியர்களால் பயிற்சியும் கொடுக்கப்படுகிறது . ஆர்வமுள்ளவர்கள் கீழ்க்காணும் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளுங்கள்.
  நாகர்கோவில்,மதுரை, திருச்சி, ஈரோடு,சென்னை மற்றும் வேலூரில் பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது .MRB,AIIMS,RRB செவிலிய தேர்வுக்கான பிரத்தியேகமாக வகுப்புகள் நடைபெறுகிறது வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
தொடர்புக்கு :-
04652220222
+918695063322
+919688771199
04448609828
www.targetnursesacademy.com

Also Here you can get valued coaching for
DHA PROMETRIC HAAD SNB OET IELTS etc

உதவிகள் இல்லையேல் இப்பூவுலகில் உயிர்கள் ஏது ? 


Monday, February 25, 2019

30 வயதை தொடும் ஆண்கள் கட்டாயம் படிக்கவும்.

எல்லா வயதிலும் நமது உடலும், மனதும் ஒரே மாதிரி இருப்பது கிடையாது. ஆனால், நமது பழக்கவழக்கங்கள் மட்டும் “தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும்” என்பது போல ஒரே மாதிரி இருக்கும். வாழ்வியல் முறையில் இது ஒரு தவறான அணுகுமுறை ஆகும். சாப்பிடும் உணவில் இருந்து, தூங்கும் நேரம் வரை வயதிற்கு ஏற்றார் போல பழக்கவழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டியது அவசியம். கல்லையும் கரைக்கும் பதின் வயது (Teen Age) என்பார்கள் என்பார்கள். ஆனால் நாற்பதை எட்டும் போது கால் கிலோ கறியைக் கரைப்பதே சிலருக்கு கடினம்!

மது, புகை குறைத்துக் கொள்ளுங்கள்

மது, புகை மட்டுமல்ல, நீங்கள் விரும்பி சாப்பிடும் எண்ணெய் சத்து, கொழுப்புச்சத்து அதிகமுள்ள நொறுக்கு தீனிகள், பிஸ்கட்டுகள், என அனைத்தையும் குறைத்துக் கொள்வது அவசியம். வயது ஏற, ஏற உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும், அந்த நேரத்திலும் நீங்கள் உடலுக்கு விஷமாக அமையும் இந்த உணவுகளை அதிகமாக உட்கொண்டு வந்தால், உடல்நிலை குறைபாடு அதிகமாக ஏற்படும்.

உடற்பயிற்சி

இதுநாள் வரை உடற்பயிற்சி செய்யாவிட்டாலும் இனிமேலாவது உடற்பயிற்சி செய்யுங்கள். ஜிம்மிற்கு தான் போக வேண்டும் என்வது கட்டாயம் கிடையாது. போனால், உடற்திறனை கொஞ்சம் அதிகமாக பேணிக்காக்க முடியும். அல்லது தினசரி காலை மற்றும் மாலை வேளைகளில் 30 நிமிடங்கள் வாக்கிங், ஜாக்கிங் போன்றவற்றில் ஈடுபடலாம்.

உறவுகள் முக்கியம்
வேலை, வேலை என்று மெட்ரோ ரயிலை போல நிக்காமல் ஓடிக்கொண்டிருக்காமல் உங்கள் வாழ்வில் உங்களோடு பயணித்து வரும் உறவுகளையும் கொஞ்சம் ஏறெடுத்து பாருங்கள். வேலை தரும் மன அழுத்தத்தை குறைக்க உலகிலேயே சிறந்த மருந்து உறவுகள் தான்.

சேமிப்பு
பணம் சேமித்து வைப்பது அவசியம், உங்களுக்கு இல்லாவிட்டாலும் உங்களது வீட்டில் உள்ளவர்களுக்கு, உங்கள் தாய், தந்தை, மனைவி. முப்பதை கடக்கும் போது கண்டிப்பாக சில உடல்நல குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. நமது உணவு பழக்கத்தின் மாறுபாட்டினால், இப்போது எல்லாம் நீரிழிவு நோய் யாருக்கு, எப்போது வருகிறது என்றே தெரிவதில்லை.

உறக்கம்
மிக மிக ம் முக்கியமானது உறக்கம். சரியான நேரத்தில், சரியான அளவு உறக்கம் தேவை. தூக்கமின்மை தான் பல உடல்நல குறைபாடுகள் ஏற்பட காரணமாக இருக்கின்றது. எனவே, எந்த வேலையாக இருந்தாலும் இரவு சரியான நேரத்தில் உறங்க வேண்டியது கட்டாயமான ஒன்றாகும்.

பல்
முக்கியம் முப்பதை கடக்கும் போது பலருக்கு ஏற்படும் முதல் வலி, பல் வலி தான். எனவே, பல்லை பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். பின், ஆரோக்கியமான உணவாகவே இருந்தாலும் மென்று சாப்பிட முடியாமல் போய் விடும்.

நண்பர்கள்
வேலைக்கு சேர்ந்த பிறகு நண்பர்களுடனான நெருக்கம் குறைந்திருக்க வாய்ப்பிருக்கிறது, நட்பை புதுப்பித்துக் கொள்ளுங்கள். நண்பர்களை விட வேறு யாரும் உங்களை மகிழ்வாய் வைத்துக்கொள்ள முடியாது. உங்கள் மனதை உறுதியாய் வைத்துக் கொள்ள ஒரே மருந்து நண்பர்கள் தான்.

முன்னெச்சரிக்கை
இதுவரை எந்த பாதுகாப்பு காப்பீடுகள் எடுத்து வைத்துக்கொள்ளவில்லை எனிலும், முதல் வேலையாக ஓர் குடும்ப மருத்துவ காப்பீட்டை துவங்குங்கள். அது மிகவும் உதவியாக இருக்கும்.

அனைவருக்கும் பகிருங்கள்.

By neruppu

Friday, February 22, 2019

நீங்கள் செவிலியம் பயிலும் கல்லூரி அங்கீகரிக்கப்பட்டதா? Is your Nursing college is Recognized by TNMC or Not

தமிழகத்தில் செவிலியர் ஊதியம் உயருகிறதோ இல்லையோ செவிலியர்கள் எண்ணிக்கையும் கல்லூரிகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் பெருகிக்கொண்டே தான் வருகிறது.
செவிலியர்களை மருத்துவமனைகள் மட்டுமல்ல கல்லூரிகளுமே வஞ்சித்து கொண்டே தான் இருக்கிறது.
ஏனோ அங்கீகாரம் அற்ற கல்லூரிகள் நமது செவிலியர் குழுமத்தின் கண்களில் தென்படுவதே இல்லை , மாணவர்கள் பதிவு செய்ய வரும் வரை .
நம்மை நாமே காத்துக் கொள்ளும் திறமையே சால சிறந்தது.செவிலியம் பயிலும் ஆர்வமுள்ளவர்கள் நமது செவிலியர் குழுமத்தின் இணைய தளம் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களை தெரிந்து கொள்ளலாம்.

Click below link for Checking Recognised college lists Under TNMC...

recognised institutions list 2018-2019

பகிருங்கள் அனைவருக்கும் பயன்படும் படி
ஒருவருக்கொருவர் உதவுங்கள் சுமைகள் குறையும் படி.

உதவிகள் இல்லையேல் இப்பூவுலகில் உயிர்கள் ஏது ?


வேலைவாய்ப்பு


Featured

Electrical Engineer Job Vacancies

Title: Exciting Opportunity: Electrical Engineer Position Available in Kuwait with JaiWin Tradez & Serviz Are you an experienced Electri...