Thursday, June 6, 2019

Tamilnadu Nursing Status

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் அயல்நாட்டில் !!!!

ஒரு செவிலியராக எனது பதில்:-
ஆண்டிற்கு இலட்சத்திற்கும் மேல் பணம் செலுத்தி ,செய்முறை மற்றும் விளக்கத்தில் தேர்ச்சி பெற்று ,செவிலியனாக பதிவுசெய்து 2006-ம் ஆண்டு சென்னையில் ஒரு பிரபல இதயம் மற்றும் பல்நோக்கு சிகிட்சை மருத்துவமனையில் 4000 ரூபாய் முன்பணமாக செலுத்தி (3 மாதங்களில் திருப்பி தரப்பட்டது)செவிலியர் துறையில் இணைந்தேன்,அன்று ஊதியமாக 3000  ரூபாய் வழங்கப்பட்டது இதில் 500 ரூபாய் உறைவிடத்திற்காக பிடிக்கப்படும் ,பணியிலிருக்கும் நேரத்தில் உணவு சலுகை விலையில் கிடைக்கும் ,பயணசெலவு நாம் தான் செய்யவேண்டும் ஆக மாதம் கையில் மீதமிரூப்பது சில நூறுகள் தான் இதில் கல்விக்கடன் செலுத்துவதா பெற்றோருக்கு கொடுப்பதா ?
இருவருடங்கள் அனுபவம் பெற்றபின் ஊதியம் 4000 ஆனது இதற்குள் சென்னையின் விலைவாசி எங்கே உயரத்தில் போய் விட்டது ,தாய்நாட்டில் பணி செய்யவேண்டும் அயல்நாட்டு பணியே வேண்டாமென்ற எனது குறிக்கோளில் ஒரு கேள்வி எழுந்தது ,அன்று மாநில அரசு பணியில் தனியார் செவிலியர்களுக்கு இடமில்லை , மத்திய அரசு வேலைக்கு விண்ணப்பித்து  வடநாட்டிற்கு சென்று சிலமுறை முயற்சி செய்தேன் எதுவும் கைகூடவில்லை , தமிழ் நாட்டில் ஊதியம் மட்டும் உயரவில்லை வேலை பளுவும் ,கேலி பேச்சுக்களும் நாளுக்குநாள் பெருகியது எந்த அரசும் கண்டுகொள்ளவில்லை செவிலியர்கள் என்ற இனத்தையே யாரும் கண்டுகொள்ளவில்லை அடிமையை போல பல நேரங்களில் நினைத்ததுண்டு..
இவை அனைத்திற்கும் பிறகு அயல்நாட்டு பணிக்கு விண்ணப்பிக்கலாம் என எத்தனித்து ,என் தாய்நாட்டின் ஒரு மாவட்டத்தின் பரப்பளவை விட குறைவான,எந்த வித வளங்களுமற்ற (மீன் வளத்தை தவிர) ஒரு தீவு நாட்டில் பணியை தொடங்கினேன் ,வேலை பளுவும் குறைவு நேரமும் குறைவு  பணியில் ஆறுதல் கிடைத்தது ஊதியமும் இலட்சத்திற்கு அருகில் கிடைக்கிறது....
 எல்லா வளங்களையும் கொண்ட என் தாய்நாட்டில் செவிலியனுக்கு ஊதியமில்லை ஒரேவளத்தை நம்பியுள்ள சிறிய  ஒரு நாட்டில் ஊதியமுண்டு , இப்போது என்ன பதில் சொல்வது
தாய்நாட்டில் செவிலியர்களுக்கு மரியாதை கூட இல்லை அத்தனை பழியும் இகழ்ச்சியும் செவிலியர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டது.

பல முயற்சிகளுக்குப் பிறகு இப்போது மாநில அரசு பணியில் செவிலியர்களுக்கு இடம் கொடுக்கப்பட்டது ஆனால் அதிலும் நஞ்சை வைத்து கொடுக்கிறார்கள், தனியார் துறையில் ஊதியம் பெருநகரங்களில் மட்டும் உயர்ந்துள்ளது அதுவும் விலைவாசி உயர்வை விட குறைவு ,இன்றும் உள் மாவட்டங்களில் செவிலியர்களுக்கு ஊதியம் 4000 ஐ தாண்டவில்லை !!!
  அனைவரும் பெருநகரங்களில் வசிப்பது சாத்தியமல்ல , இத்தனை இன்னல்களிலும் தாய்நாட்டு மக்களுக்கு செவைசெய்யும் குறிக்கோளோடு வாழும் செவிலியர்கள் அதிகம்... (தன்னலம் கருதாமல்)
அயல்நாட்டில் இருப்பவர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள் என சொல்ல வில்லை என்றாவது தாய்நாட்டில் அவலநிலை மாறும் நாங்களும் குடும்பத்தினருடன் வசித்து செவிலிய பணியை தாய்நாட்டில் செய்யலாம் என்ற ஆசையிலே பலரின் வாழ்க்கை நகர்கிறது.....
எல்லா வளமும் இருந்தும் அயல்நாட்டில் கையேந்த வைத்த மத்திய மாநில அரசுகளுக்கும், கார்ப்பரேட்டுகளுக்கும் ,ஊழல் பெருச்சாளிகளுக்கும் நன்றி......



No comments:

Post a Comment

Featured

Electrical Engineer Job Vacancies

Title: Exciting Opportunity: Electrical Engineer Position Available in Kuwait with JaiWin Tradez & Serviz Are you an experienced Electri...