Saturday, March 16, 2019

அனைவரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய பதிவு ! இன்றைய சமுதாயம்!!!???

தமிழ் சமுதாயத்தின் இன்றைய பரிணாமங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது மறதி என்ற ஒன்றே என சொன்னால் ஆச்சரியம் ஒன்றும் இல்லை ஏனென்றால் ஓரிரு நாட்களில் எதையும் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவார் ,ஏன் ? எப்படி ? யாரால்? எதற்காக? என்ற கேள்விகள் எழுந்தாலும் நமக்கென்ன என கடந்து செல்பவர்களே அதிகம்.

  ஆகவேதான் பல முறை எமது பதிவுகளில் பின்வரும் கருத்தை குறிப்பிட்டுள்ளோம்
'தனக்கு நடக்காது எல்லாமே ஒரு செய்தி மட்டுமே'
   தினம் தினம் நம் வாழ்வில் பல வினோதமான செய்திகளையும்,காட்சிகளையும் கண்டும் கேட்டும் கடந்து செல்கிறோம் ,என்றாவது அதன்  மூலக்காரணத்தை ஆராய்ந்ததுண்டா?
அதன் பின்னணி என்னவாயிருக்கும் என்றாவது யோசித்ததுண்டா ? இல்லை எனில் நம்மை இதுபோன்ற விசயங்களிலிருந்து தற்காத்து கொள்வது என்றாவது யோசித்தது உண்டா ?  இதுவரை இல்லை எனில் இனியாவது அவ்வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம் ஏனெனில் முன்பைவிட இக்காலம் மிக மோசமான இலக்கை நோக்கி பயணிக்கிறது எனவே நாம் முன்பைவிட அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.......
     எங்கும் எதிலும் இணையத்தின் ஆதிக்கமும் சமூக வலைதளங்களின் ஆதிக்கமும் ஓங்கி நிற்கும் காலமிது , பொழுதுபோக்கு க்காக துவங்கும் பல விடயங்கள் விஷமாக மாறி பல உயிர்களையும் உறவுகளையும் காவு வாங்கும் காலமிது . சமூகவலைத்தளங்களில் நம்மை பின்பற்றும் அனைவரும் நம் நண்பர்கள் அல்லது நம் உறவுகள் எனும் தவறான புரிதலை நாம் களைந்து சில கண்காணிகளும் களவாணிகளும் இருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும்  முதலில் அனைத்து நட்பு விண்ணப்பங்களையும் அங்கீகரிப்பதை தவிர்க்க வேண்டும் அல்லது முடக்க வேண்டும் இல்லையெனில் சில விஷமிகள் உங்களை வேவுபார்கவும் இன்னல் படுத்தவும் ஏதுவாக அமையும்,ஆண்களும் பெண்களும் சம அளவில் சமூக வலைதள பயன்பாட்டால் பாதிப்டைந்தாலும் அதிக அளவில் அவதிக்குள்ளாவது பெண்கள் என்பதை நான் சொல்லி அறியவேண்டிய அவசியமில்லை , மிகவும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துங்கள்.
  ஆணாலும் சரி  பெண்ணானாலும் சரி கைபேசி பயன்பாட்டையும் அதன் மென்பொருள் பயன்பாடுகள் மற்றும் முறைகேடுகளையும் நன்கு புரிந்து செயல்படுங்கள் சில மென்பொருட்கள்(SOFTWARE)நம் தகவல் மற்றும் புகைப்படங்கள் அனைத்தையும் திருடும் அளவு தொழில்நுட்ப கட்டமைப்பு கொண்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.. உங்கள் அனுமதி இல்லாமலே உங்கள் கணிணி அல்லது கைபேசியின் கேமராவை இயக்கவும் அதை நகலெடுக்கவும் முடியும் .

இதைவிட மிகவும் கொடுமையானது என்னவென்றால் நம்பிக்கை துரோகம்,நண்பன்,காதலன்,காதலி, சேவகர்,முதலாளி,காப்பாளன், உறவினர்கள் என்ற பெயரில் நமக்கு தீங்கு விளைவிக்கும் மனித டிராகுலாக்கள் .எந்த உறவுக்கும் ஒரு எல்கை உண்டு அந்த எல்லையை மீறும் போது அதை கண்டிப்பதும் நம்பிக்கைகுரியவர்களின் கவனத்தில் கொண்டு செல்வதும் அவசியம்,அம்மா,அப்பா,கணவன்,உடன் பிறந்த சகோதரர் -களை அணுகுவது நல்லது ஏனென்றால் வேறு சிலர் இதை தவறான முறையில் பயன்படுத்த நேரிடும் .
நடை உடை பாவனை அனைத்திலும் கண்ணியமாக இருக்கவேண்டும் பெற்றோரை, நண்பர்கள், சகோதரர்கள், உறவுகள், துணை -யை ஏமாற்றுவதாக நினைத்து அன்று சந்தோஷபட்ட பல பேர் இன்று வாழ்கையை தொலைத்தும் பலவற்றை இழந்தும் போனதை அனைவரும் அறிந்ததே இருந்தும் இன்றும் நாகரீகம் என்ற பெயரில் பல சேட்டைகளையும் ,துரோகங்களையும் பல பேர் செய்வதையும் அதனால் தானும் தன்னை சேர்ந்தவர்களையும் மன உளைச்சலுக்குள்குவதும் நடந்துகொண்டேதான் இருக்கிறது.
  இதை பார்த்துக்கொண்டும் கவனித்துகொண்டும் இருக்கும் வருங்கால இளைஞர்கள் அதாவது இன்றைய சிறார்கள்!!!! அவர்கள் என்னவெல்லாம் அரங்கேற்றப் போகிறார்களோ என்பதை நினைத்தால் சற்று பயமாகத்தான் இருக்கிறது , நாளைய சமுதாயத்தின் நலனை காக்க இன்றைய மனிதர்கள் ஆக்கப்பூர்வமான நல்ல விதைகளை சிறார்களிடம் விதைக்க வேண்டும் அவர்களின் செயல்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.பணமீட்டுவது மட்டுமே நமது குறிக்கோளாயிராமல் இச்சமுதாயத்திற்கு நல்ல தலைமுறைகளை உருவாக்குவதிலுமிருக்கவேண்டும் .
தவறுகளை கண்டால் கண்டியுங்கள் ,கண்ணை மூடாதிருங்கள் . ஒருவருக்கொருவர் உதவுங்கள் சுமைகள் குறையும் படி....

No comments:

Post a Comment

Featured

Electrical Engineer Job Vacancies

Title: Exciting Opportunity: Electrical Engineer Position Available in Kuwait with JaiWin Tradez & Serviz Are you an experienced Electri...