இந்த நாடு கொள்ளைகாரக்கூட்டத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. படித்தவன் பிச்சைகாரனாகவும் படிக்காத தந்திரசாலி அவனுக்கு அதிகாரியாகவும் இருக்கின்றனர்.
சுதந்திரபோராட்டம் என்று நம்பி நாட்டை மேம்படுத்தியவனை விரட்டி கொள்ளைகாரனுக்கு தாரைவார்த்துவிட்டோம்.
பிணத்தில் பணம் சம்பாதிக்கும் பிணம்தின்னி கழுகுகூட்டங்கள் நம்முடைய அதிகாரிகள், அந்த பிணத்தில் பங்குகேட்கும் ஓநாய்கள், நம்மை பிரித்தாளும் தந்திர நரிகூட்டங்கள்.
நம் உழைப்பை திருடும் நயவஞ்சக மருத்துவர்கள்,
அந்த சூழ்சிக்கு இரையான நம்மில் சில அப்பாவி கோமாளிகள்.
சிந்தித்துபார்த்தால் பயமாக இருக்கிறது இன்னும் எத்தனைநாள் உயிர்வாழ்வோமென்று.
தன்னுடைய சுயலாபத்திற்காக தாயின் மடியைக்கூட அறுக்கவும் தயங்காத இந்த நயவஞ்சகர்கள் செய்யும் செயலைப்பார்த்தால் உலகத்தின் இறுதிக்கு வந்துவிட்டோமோ என்ற எண்ணம்.
திருடன் திடருடுகிறான் அந்த திருடனை பிடிப்பவனே பெரிய திருடனாயிருக்கிறான்.
லஞ்சவொளிப்புத்துறையை தன்னுடைய எதிரியை அழிக்கும் ஆயுதமாகவும் தனக்கு திருட உதவும் ஆயுதமாக மாற்றிய அரசு, மதவாத இனவாத கொள்கையைக்கொண்டு நம்மை பிரித்தாண்டு நம்மை அவன் செய்யும் தவறை பற்றி சிந்திக்கவிடாமல் தடுக்கிறான்.
நம் உழைப்புக்கு வரி, உண்டால் வரி, வாங்கினால் வரி, விற்றால் வரி, கழிப்பிடத்தில் கழித்தால் வரி.
நம் பணத்தில் வாழும் மானம்கெட்ட அரசியல்வாதிக்கெல்லாம் மரியாதை வேறு கேடு?
நாம் உழைப்பின் சம்பளத்தைக்கேட்டால் தன் அப்பன்வீட்டிலிருந்து தருவதுபோல பேசும் மானம்கெட்ட அதிகாரிகள்.
தான் டாக்ட்டராகிவிட்டால் தன் பிள்ளை டாக்டர், பிள்ளைக்கு பிள்ளை டாக்டர், டாக்டர் ஜாதியாகவே மாறிவிடுகிறான். தன் பிள்ளை டாக்டராகவேண்டுமென நினைக்கும் டாக்டர் தன்னுடன் பணிபுரியும் செவிலியர் பிள்ளை உயர்ந்த படிப்பு படிப்பதை விரும்புவதில்லை.
ஏழை விவசாயியின் புள்ளை மக்கள் பணத்தில் டாக்டராகிவிடுகிறான் ஆனால் பிற்காலத்தில் அவன் அதை மறந்துவிடுகிறான், தன்னை டாக்டராக்கியது மக்கள் பணமென்பதை மறந்து அந்த மக்களாகிய பாலூட்டிய தாயின் மடியை அறுப்பதுபோல மக்களுக்கு துரோகம் செய்கிறான்.
அனியாயத்தை கண்டால் அதை தட்டிக்கேட்கவேண்டுமென்ற உணர்வு மாறி அநியாயம் செய்து சம்மபாதிக்கவேண்டுமென்று நினைக்கிறான்.
1ருபாய் திருடிவால் அதற்க்கு பெயர் திருட்டு ஆனால் கோடிகள் திருடினால் அதற்குபெயர் ஊழல். திருடன் தேர்தலில் பங்கெடுக்க முடியாது ஆனால் உன்பணத்தை திருடிய ஊழல்வாதி உன்னையே ஆளலாம். இதுதான் சமூக நீதி.
எத்தனையோ உயிர்களை காத்த நம் செவிலியர்கள் நோய்பட்டால் தன்னுடைய வறுமையின் காரணமாக கிடைப்பதோ மிகவும் குறைந்த மருத்துவ வசதி. இறுதியில் அவள் சாவு மருத்துவர்களுக்கு ஒரு case death. ஆனால் நம் உறவுகளுக்கோ?.
இத்தனை அநியாயங்களும் செய்யும் ஆவனுக்கு நீ கொடுக்கூம் தண்டனையோ மரியாதை, ராஜ மரியாதை.
இத்தனை தவறுகள் நாட்டில் பெருகியிருக்க காரணம் யார்?
நீ தான்.
தன் உரிமைக்காக போராடுபவனை தீவிரவாதி என்கிறாய்.
தன் சம்பளத்திற்காக போராடுபவனை பைத்தியக்காரனைன்கிறாய்.
உனக்கு பணியிடத்தில் நிம்மதியாய் இருக்க உன்னுடன் பணியாற்றும் செவிலியரை இந்த கயவர்களிடம் காட்டிக்கொடுக்கிறாய், அந்த நெருப்பில் நீ குளிர்காய்கிறாய்.
கயவர்களுக்கு சொம்பு துக்குகிறாய்.
திருடனுக்கு சலாம் போடுகிறாய், அவன் செய்யும் அயோக்கியதனத்திற்கு உடன் போகிறாய்.
உன் இருப்பிடத்தை காப்பாற்றிக்கொள்ள உனக்காக பிறர் போராடும்பொழுது அந்த இடத்தில் நீ பணிபுரிகிறாய்.
உரிமையை கேட்கும் உனக்கு அவன் பிச்சை போடும்போது அதை ஏற்றுக்கொண்டு அதை ஏற்க்காதவனை முட்டாளென்கிறாய்.
திருடனை எதிர்க்கும் உனக்கு அவன் கொடுக்கும் சிறு பங்கான எலும்புதுண்டு உன் நாவில் நீர் வடிய அதை ஏற்றுக்கொண்டு, உன் கொழ்கையை மறந்து அவனுக்கு வாலாட்டுகிறாய்.
கயவர்களிடம் தெடர்புகொண்டு உனக்காக போராடுபவனை காட்டிக்கொடுக்கிறாய்.
இந்த நாட்டில் மிகப்பெரிய இன படுகொலை நடக்கவிருக்கிறது. பணக்காரன், ஏழை என்ற இனம். அதை புரியாமல் நீ ஜாதி மத பாகுபாடினால் கறைபட்டுக்கிடக்கிறாய்.
வெகுண்டெழு. முதலில் உன்னை மாற்றிக்கொள், பின்பு பிறனை மாற்ற முயற்ச்சி செய்.
எழுந்து போராடு, இனி காலம் இல்லை, வெற்றி உனதே.
நன்றி-நே.சுபின்
தமிழ்நாடு தனியார் செவிலியர்கள் சங்கமம்
Subscribe to:
Post Comments (Atom)
Featured
Electrical Engineer Job Vacancies
Title: Exciting Opportunity: Electrical Engineer Position Available in Kuwait with JaiWin Tradez & Serviz Are you an experienced Electri...
-
UK Nurses Will Begin Performing Surgeries Under New Rules - News - Nurses Arena Forum Nurses Arena Forum / General Category / News /...
-
TNPNA United with GNAT Decision making group dont misuse it- For our Futre and Rights Choose approp...
No comments:
Post a Comment