செவிலியர்வாழ்வுரிமை போராளிகள் இணைந்து நடத்தும் செவிலியர்களின் வாழ்வுரிமையை காப்பதற்க்கான
#கவனஈர்ப்பு_அறப்போராட்டம்
செவிலியர்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்து நடைமுறைப்படுத்த வேண்டிய கோரிக்கைகள்
1) உச்ச நீதிமன்ற ஆணையின் படி 2016 அம் ஆண்டு ஆணையிட்டு அரிவுறித்திய குறைந்தபட்ச சம்பளம் ரூபாய் 20000 மற்றும் மருத்துவமனையின் படுக்கை எண்ணிக்கையின் படி அரசு செவிலியர்களுக்கு இணையாக ரூபாய் 30000 க்கு மேல் அனைத்து செவிலியர்களுக்கும் வழங்க வேண்டும்.
2). செவிலியர்கள் என்ற பேரில் போலி செவிலியர்களை ( முறையான படிப்பின்றி) கொண்டு நடத்தும் தனியார் மருத்துவமனைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3). INC (Indian Nursing Council) 1947 விதியின் படி செவிலிய பயி்ற்ச்சிக்கும், செவிலிய கல்விக்கும் உரிய தகுதியுடைய பொறுப்பாளர்களை நியமித்து செவிலியத்தையும், செவிலியரின் முக்கியத்துவத்தையும் மேம்படுத்த வேண்டும் .
4). நம் முன்னாள் ஜனாதிபதி DR. அப்துல் கலாம் அவர்கள் கூறியபடி கிராமப்புற சுகாதாரம் மேம்படவும், செவிலியர்களின் வாழ்வாதாரம் உயரவும் கிராமப்புற செவிலிய-மருத்துவர் பயிற்சி முறையை உடனே நடைமுறை படுத்த வேண்டும் .
5). Staff-Nurse என்ற பெயரை Nursing-Officer என்று மாற்றி ஆணை வழங்க வேண்டும் .
6). INC மற்றும் MCI வழிகாட்டுதலின்படி செவிலியர் -நோயாளி சதவிகிதத்தை பின்பற்றவும், நடைமுறைப்படுத்தாத மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் .
7). செவிலியர்களுக்கு பணியின் போது உரிய பாதுகாப்பும், உளவியல் தொடர்பான கலந்தாய்வுகளையும் நடத்தி செவிலியர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்திட அனைத்து மருத்துவமனைகளிலும் தனி துறையை உருவாக்கிட வேண்டும்.
8). செவிலியர்களின் வேலை வாய்ப்பையும், பள்ளிகளில் உள்ள மாணவர்களின் நலத்தையும் மேம்படுத்த பள்ளிகளில் (School Health Nurse) என ஒரு துறையை உருவாக்கி வேளை வாய்ப்பு வழங்க வேண்டும்.
9). சினிமா மற்றும் ஊடகங்களிலும் செவிலியர்களை தவறாக காட்சிப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறோம்.
10). செவிலியர்கள் பணியில் சேரும் போது அவர்களிடம் முன்பணம் மற்றும் அவர்களின் Original சான்றிதழ்களை கையகப்படுத்தும் நடைமுறை தவறானது என்ற விதிமுறை இருந்தும் அவ்வாறு செயல்படுத்தும் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அனைத்து செவிலியர்கலும் அலைகடல் என திரண்டு வாரிர் Jully 16 ல் படை எடுப்போம் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை நோக்கி...
Subscribe to:
Post Comments (Atom)
Featured
Electrical Engineer Job Vacancies
Title: Exciting Opportunity: Electrical Engineer Position Available in Kuwait with JaiWin Tradez & Serviz Are you an experienced Electri...
-
UK Nurses Will Begin Performing Surgeries Under New Rules - News - Nurses Arena Forum Nurses Arena Forum / General Category / News /...
-
TNPNA United with GNAT Decision making group dont misuse it- For our Futre and Rights Choose approp...
No comments:
Post a Comment