Friday, February 21, 2020

சமுதாய பார்வை

தமிழ் சமுதாயத்தின் இன்றைய பரிணாமங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது மறதி என்ற ஒன்றே என சொன்னால் ஆச்சரியம் ஒன்றும் இல்லை ஏனென்றால் ஓரிரு நாட்களில் எதையும் மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவார் ,ஏன் ? எப்படி ? யாரால்? எதற்காக? என்ற கேள்விகள் எழுந்தாலும் நமக்கென்ன என கடந்து செல்பவர்களே அதிகம். 
  ஆகவேதான் பல முறை எமது பதிவுகளில் பின்வரும் கருத்தை குறிப்பிட்டுள்ளோம் 
'தனக்கு நடக்காது எல்லாமே ஒரு செய்தி மட்டுமே' 
   தினம் தினம் நம் வாழ்வில் பல வினோதமான செய்திகளையும்,காட்சிகளையும் கண்டும் கேட்டும் கடந்து செல்கிறோம் ,என்றாவது அதன்  மூலக்காரணத்தை ஆராய்ந்ததுண்டா?
அதன் பின்னணி என்னவாயிருக்கும் என்றாவது யோசித்ததுண்டா ? இல்லை எனில் நம்மை இதுபோன்ற விசயங்களிலிருந்து தற்காத்து கொள்வது என்றாவது யோசித்தது உண்டா ?  இதுவரை இல்லை எனில் இனியாவது அவ்வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வோம் ஏனெனில் முன்பைவிட இக்காலம் மிக மோசமான இலக்கை நோக்கி பயணிக்கிறது எனவே நாம் முன்பைவிட அதிக கவனம் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.......
     எங்கும் எதிலும் இணையத்தின் ஆதிக்கமும் சமூக வலைதளங்களின் ஆதிக்கமும் ஓங்கி நிற்கும் காலமிது , பொழுதுபோக்கு க்காக துவங்கும் பல விடயங்கள் விஷமாக மாறி பல உயிர்களையும் உறவுகளையும் காவு வாங்கும் காலமிது . சமூகவலைத்தளங்களில் நம்மை பின்பற்றும் அனைவரும் நம் நண்பர்கள் அல்லது நம் உறவுகள் எனும் தவறான புரிதலை நாம் களைந்து சில கண்காணிகளும் களவாணிகளும் இருக்கிறார்கள் என்பதை உணரவேண்டும்  முதலில் அனைத்து நட்பு விண்ணப்பங்களையும் அங்கீகரிப்பதை தவிர்க்க வேண்டும் அல்லது முடக்க வேண்டும் இல்லையெனில் சில விஷமிகள் உங்களை வேவுபார்கவும் இன்னல் படுத்தவும் ஏதுவாக அமையும்,ஆண்களும் பெண்களும் சம அளவில் சமூக வலைதள பயன்பாட்டால் பாதிப்டைந்தாலும் அதிக அளவில் அவதிக்குள்ளாவது பெண்கள் என்பதை நான் சொல்லி அறியவேண்டிய அவசியமில்லை , மிகவும் கவனமாகவும் பாதுகாப்பாகவும் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துங்கள்.
  ஆணாலும் சரி  பெண்ணானாலும் சரி கைபேசி பயன்பாட்டையும் அதன் மென்பொருள் பயன்பாடுகள் மற்றும் முறைகேடுகளையும் நன்கு புரிந்து செயல்படுங்கள் சில மென்பொருட்கள்(SOFTWARE)நம் தகவல் மற்றும் புகைப்படங்கள் அனைத்தையும் திருடும் அளவு தொழில்நுட்ப கட்டமைப்பு கொண்டவை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.. உங்கள் அனுமதி இல்லாமலே உங்கள் கணிணி அல்லது கைபேசியின் கேமராவை இயக்கவும் அதை நகலெடுக்கவும் முடியும் .

இதைவிட மிகவும் கொடுமையானது என்னவென்றால் நம்பிக்கை துரோகம்,நண்பன்,காதலன்,காதலி, சேவகர்,முதலாளி,காப்பாளன், உறவினர்கள் என்ற பெயரில் நமக்கு தீங்கு விளைவிக்கும் மனித டிராகுலாக்கள் .எந்த உறவுக்கும் ஒரு எல்கை உண்டு அந்த எல்லையை மீறும் போது அதை கண்டிப்பதும் நம்பிக்கைகுரியவர்களின் கவனத்தில் கொண்டு செல்வதும் அவசியம்,அம்மா,அப்பா,கணவன்,உடன் பிறந்த சகோதரர் -களை அணுகுவது நல்லது ஏனென்றால் வேறு சிலர் இதை தவறான முறையில் பயன்படுத்த நேரிடும் .
நடை உடை பாவனை அனைத்திலும் கண்ணியமாக இருக்கவேண்டும் பெற்றோரை, நண்பர்கள், சகோதரர்கள், உறவுகள், துணை -யை ஏமாற்றுவதாக நினைத்து அன்று சந்தோஷபட்ட பல பேர் இன்று வாழ்கையை தொலைத்தும் பலவற்றை இழந்தும் போனதை அனைவரும் அறிந்ததே இருந்தும் இன்றும் நாகரீகம் என்ற பெயரில் பல சேட்டைகளையும் ,துரோகங்களையும் பல பேர் செய்வதையும் அதனால் தானும் தன்னை சேர்ந்தவர்களையும் மன உளைச்சலுக்குள்குவதும் நடந்துகொண்டேதான் இருக்கிறது.
  இதை பார்த்துக்கொண்டும் கவனித்துகொண்டும் இருக்கும் வருங்கால இளைஞர்கள் அதாவது இன்றைய சிறார்கள்!!!! அவர்கள் என்னவெல்லாம் அரங்கேற்றப் போகிறார்களோ என்பதை நினைத்தால் சற்று பயமாகத்தான் இருக்கிறது , நாளைய சமுதாயத்தின் நலனை காக்க இன்றைய மனிதர்கள் ஆக்கப்பூர்வமான நல்ல விதைகளை சிறார்களிடம் விதைக்க வேண்டும் அவர்களின் செயல்களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.பணமீட்டுவது மட்டுமே நமது குறிக்கோளாயிராமல் இச்சமுதாயத்திற்கு நல்ல தலைமுறைகளை உருவாக்குவதிலுமிருக்கவேண்டும் .
தவறுகளை கண்டால் கண்டியுங்கள் ,கண்ணை மூடாதிருங்கள் . ஒருவருக்கொருவர் உதவுங்கள் சுமைகள் குறையும் படி....


Pain of Nurses

இன்றைய நவீன தமிழகத்தின் ஒவ்வொரு செவிலியர்களின் ஆறா வலி !
இந்த சமுதாயத்தில் உள்ள  ஒவ்வொரு தனிமனிதனும் அல்லது குடும்பமும் ஏதாவது ஒரு வகையில் செவிலியர்களின் சேவையை பெற்றவர்களே என்பதை யாராலும் மறுக்க இயலாது. இருந்தும் செவிலியர்களை அவமதிப்பதும்,தவறாக சித்தரிப்பதும் ,மனது புண்படும் படி இகழ்வதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு இந்த சமுதாயத்தின் பதில்  என்ன ?
            செவிர்களின் நடை, உடை, பாவனை அனைத்தையும் விமர்சனங்கள் செய்யும்  உறவுகளே என்றாவது ஒரு முறை செவிலியர்களை நீங்கள் பாராட்டினது உண்டா? இல்லை எனில் செய்து பாருங்கள். ..... ஏனெனில் தன் நலம் பாராமல் இரத்தமும், காயமும், வலியும் , நோயுமாய் வருபவர்களின் நலத்திற்காக பணிபுரிபவர் இந்த செவிலியர்கள். ரோட்டில் ஒருவர் தும்மினாலே மூக்கை மூடும் மக்களின் மத்தியில் வாழ்க்கை முழுவதும் நோயாளிகளினுடன் கழிக்கும் இவர்களைப் பற்றி யோசித்து உண்டா?
எங்களின் தனிப்பட்ட விருப்பம் காரணமாக தான் இந்த மகத்தான பணியை தேர்ந்தெடுத்தோம் மிக சந்தோஷமாக சேவைமனப்பான்மையுடன்.ஆனால் இந்த அர்ப்பணிப்புக்கு  கிடைத்த பரிசு கொடிய விமர்சனங்களும் அவமானங்களுமே,மருத்துவமனையிலும் பொதுஇடங்களிலும் நாங்கள் கேட்கும் வசைமொழிகளை உங்கள் உறவினர்களுக்கு  என்றால் பாராட்டுவீர்களா ?
 உங்களுக்காக அர்ப்பணித்து பணி புரியும் எங்களுக்காக நீங்கள் குரல் கொடுக்க மாட்டீர்களா?
3 - 5 ஆண்டுகள் 5 -8 லட்சம் ரூபாய் செலவு செய்து படித்து தாய் நாட்டில் தலை நிமிர்ந்து வாழ முடியாது  அயல்நாட்டில் வாழும் எங்களில் பலரை அறிவீர்களா? இப்போது புரிகிறது சேவையை மட்டும் கொண்டு சாதம் பொங்க முடியாது என்று. ...மாத ஊதியம் ரூபாய் 2500 - 3500 இதில்  என்ன செய்ய முடியும் இந்த நிலை நீடித்தால் தமிழகத்தில் அரிதாக காணப்படும் விவசயம் போல செவிலியமும் இருக்கும். நோயாளிகளின் கண்ணீரைத் துடைக்கும் செவிலியர்களின் கண்ணீரைத் துடைக்க ஆளில்லை எனும் போது தான் எங்கள் லட்சியம்  உடைகிறது. கேரளாவில் செவிலியர்கள் மருத்துவமனையை புறக்கணித்து போராட்டம் செய்த போது  ஏற்ப்பட்ட சிரமங்கள்  அனைவரும் அறிந்ததே, ஆனால் அத்தகைய ஒரு போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்காததற்க்கு காரணம் நம் மக்கள் சிரமப்பட கூடாது  என்ற ஒன்றேதான். என்ன கைமாறு இந்த செவிலியர்களுக்கு செய்ய போகிறது இந்த தமிழ்நாடு. செவிலியர்கள் இல்லா மருத்துவமனையை இல்லை  ஏன் தமிழகத்தை கற்பனை செய்து பாருங்கள் எங்கள் பங்கு  இந்த சமுதாயத்தில்  என்ன என்று அறிவீர்கள். மன்னிக்கவும் கடும் சொற்களுக்கு.
இது ஒரு பிரதிபலிப்பே !!!!
                                                             - தமிழ்நாடு தனியார் செவிலியர்கள் சங்கமம்

AIIMS BHOPAL RAIPUR PATNA JODPUR 2020 RESULTS

AIIMS Result Full Download pdf
AIIMS RESULT DOWNLOAD


Thursday, January 16, 2020

மிடாலக்காடு மாரத்தான் , மரம் நடுவோம் பசுமையை காப்போம்

மிடாலக்காடு ஸ்போர்ட்ஸ் கிளப் 33 வது ஆண்டுவிழாவை முன்னிட்டு (14-01-2020) அன்று நடத்தப்பட்ட (12.5km)  மாரத்தான் போட்டி யை குளச்சல் போக்குவரத்து ஆய்வாளர் திரு ராதாகிருஷ்ணன் & கன்னியாகுமரி ஜவான்ஸ் அவர்களால் துவங்கப்பட்டது. இந்த மாரத்தான் போட்டியில் 180  🏃 ஆண்கள் 05 🏃‍♀ பெண்கள் என மொத்தம் 185 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். மாரத்தானின் நோக்கம் 🌳மரம் நடுவோம் பசுமையை காப்போம் இதன்படி திரு ராதாகிருஷ்ணன் அவர்களாலும், கன்னியாகுமரி Jawans அவர்களாலும் இரண்டு 🌳 மரங்கள் மிடாலக்காடு ஜங்ஷன் ல் வைத்து நடப்பட்டு மாரத்தான் ஓட்டம் துவங்கப்பட்டது. இந்த மாரத்தான் ஓட்டம் மிடாலக்காடு ஜங்ஷன் ல் இருந்து துவங்கப்பட்டு கருங்கல் வழியாக பாலப்பள்ளம், இரும்புலி, ஆலஞ்சி வழியாக மிடாலக்காடு ஜங்ஷனில் நிறைவு பெற்றது. 👆👆👆 கடைசியில் நோக்கத்தின் அடிப்படையில் அனைத்து வீரர்களுக்கும் மரங்கள் வழங்கப்பட்டன...... நன்றி .... 🙏

Sunday, January 12, 2020

இலவச DHA HAAD MOH PROMETRIC GOVERNMENT EXAMS பயிற்சி வகுப்புகள்


 நமது Target Nurses Academy -ன் 5 வது ஆண்டு துவக்கவிழாவில் பொருளாதாரத்தில் மிகவும் நலிவடைந்த செவிலியர்களுக்கு தங்கள் கனவை நனவாக்க முற்றிலும் இலவசமாக DHA HAAD MOH PROMETRIC GOVERNMENT EXAMS COACHING போன்றவற்றை முற்றிலும் இலவசமாக 3 செவிலிய நண்பர்களுக்கு கொடுக்க இருக்கிறோம் .இது சாதிக்க மனமிருந்தும் பணமின்மையால் முடங்கிப்போன மூவருக்கு உதவும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட ஒரு நிகழ்வாகும்.

     இதற்கு நீங்கள் செய்யவேண்டியது உங்கள் பெயர் , முகவரி மற்றும் தொடர்பு எண்ணை எமக்கு வாட்ஸ்அப் அல்லது குறு‌ஞ்செய்தி மூலமாக அனுப்ப வேண்டும் +918695063322.
   20:01:2020 அன்று காலை நடைபெறும் விழாவில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படு பயனாளிகளுக்கு இலவச பயிற்சிக்கான ஒப்புதல் கு‌றுஞ்செய்தி அனுப்பப்படும்.இத்தகவல் மிகவும் பாதுகாப்பாக இருக்கும் வெளியே பகிரப்பட மாட்டாது ( we will maintain this as a highly confidential message ,we will not publish to anyone )
       தகவல்கள் 18.01.2020 அன்று மாலை 6 மணிக்கு முன்பாக அனுப்பபடவேண்டும் .



உபயோகப்படுத்துங்கள் அல்லது பகிருங்கள் யாருக்கேனும் உதவலாம்



TARGET NURSES ACADEMY
+918695063322
Nagercoil Madurai Trichy Chennai Vellore

Featured

Electrical Engineer Job Vacancies

Title: Exciting Opportunity: Electrical Engineer Position Available in Kuwait with JaiWin Tradez & Serviz Are you an experienced Electri...