*மனித நேயத்துடன்..*
🌳🤝😷
*Respected Helping Hands 🤝*
தேதி:21.05.2021-31.05.2021
✍️ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த நம் MRB செவிலிய சகோதரி திருமதி. கன்னிமரியாள் (வயது 33) அவர்கள் கடந்த மே மாதம் 13.05.21 அன்று பணிக்கு செல்லும் போது எதிர்பாரத விதமாக சாலை விபத்திற்கு உள்ளாகி தலையில் (RTA with Headinjury) பலத்த காயத்துடன் திருநெல்வேலி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யப்பட்டு, 13.05.21 முதல் 11.06.21 வரை சிகிச்சை அளிக்கப்பட்டது.
✍️நரம்பியல் மருத்துவர்களின் ஆலோசனை படி, அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.
✍️உடற்பயிற்சி சிகிச்சையும் (Physiotherapy) அளிக்கப்பட்டது.
✍️உடலில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக நம் சகோதரி 11.06.2021 அன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
D.O.ADMN:13.05.2021.
DIAGNOSIS:RTA WITH HEAD INGURY
COVID RESULT: NEGATIVE
SURGERY: LT FTP CRANIOTOMY AND EVACUATION OF EDH.
TRACHEOSTOMY DONE.
D.O.DISCHARGE:11.06.2021
✍️மேலும் நம் சகோதரியின் பொருளாதார சூழ்நிலை கருதி,அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்ஸார்ஜ் செய்யபட்ட பிறகும், ரூ 40,000 மதிப்பு தக்க ICU COT BED, SUCTION APPARATUS போன்ற உபகரணங்களை வாங்கி கொடுத்த ராஜபாளையம் அரசு மருத்துவமனையின் மரியாதை குரிய நம் மரு.ஜெயபாஸ்கர் அவர்களுக்கும், நம் மருத்துவரின் அன்பு கட்டளையை ஏற்று,இந்த உபகரணங்களை முறையாக ஆர்டர் செய்து, வீட்டில் சேர்த்த மரியாதை குரிய BME சார் திரு.ஜோதிமுருகன்,அவர்களுக்கும்,நம் செவிலியர்கள் சார்பாக மனித நேயத்துடன் நன்றி தெரிவித்து கொள்ளப்படுகிறது.
✍️மேலும்,நம் சகோதரியின் உடற்பயிற்சி சிகிச்சைக்காக (Physiotherapy), முன் ஏற்பாட்டையும், நம் மரு.ஜெயபாஸ்கர் அவர்கள் செய்துள்ளதுள்ளார்.
✍️மனித நேயத்துடன்..
அமைப்பு திரு.ஆர்.ஸ்ரீனிவாசன் IPPB(India Post Payments Bank) மூலம் 06.06.2021 அன்று நம் சகோதரிக்கு கிடைத்த கருணை நிதி தொகை ரூ.40,000.
இத்தொகை நம் சகோதரியின் கணவர் திரு.விநாயகம் அவர்களின் வங்கி கணக்கு அனுப்பபட்டது.
✍️மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து, சகோதரிக்கு பெரும் ஆதரவாக இருந்த நம் மரியாதை குரிய மூத்த செவிலியர் திருமதி.லதா அவர்களுக்கும், (ம) நம் சகோதரிக்கு சிகிச்சை அளித்த நம் மருத்துவர்கள், நம் செவிலிய சகோதர,சகோதரிகளுக்கும், (ம)கருணை நிதி அளித்து உதவி செய்த மற்றும் பிரார்த்தனை செய்த அனைத்து மனித நேய நல் உள்ளங்களுக்கும், மனித நேயத்துடன் நன்றி தெரிவித்து கொள்ளப்படுகிறது.
இப்படிக்கு,
ஆர்.ஸ்ரீனிவாசன்,
ஆண் செவிலியர்.
கலவை, அரசு மருத்துவமனை - ராணிப்பேட்டை மாவட்டம்.
(அரசு பணி: 2011-2021)🙏