இன்றைய நவீன தமிழகத்தின் ஒவ்வொரு செவிலியர்களின் ஆறா வலி !
இந்த சமுதாயத்தில் உள்ள ஒவ்வொரு தனிமனிதனும் அல்லது குடும்பமும் ஏதாவது ஒரு வகையில் செவிலியர்களின் சேவையை பெற்றவர்களே என்பதை யாராலும் மறுக்க இயலாது. இருந்தும் செவிலியர்களை அவமதிப்பதும்,தவறாக சித்தரிப்பதும் ,மனது புண்படும் படி இகழ்வதும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இதற்கு இந்த சமுதாயத்தின் பதில் என்ன ?
செவிர்களின் நடை, உடை, பாவனை அனைத்தையும் விமர்சனங்கள் செய்யும் உறவுகளே என்றாவது ஒரு முறை செவிலியர்களை நீங்கள் பாராட்டினது உண்டா? இல்லை எனில் செய்து பாருங்கள். ..... ஏனெனில் தன் நலம் பாராமல் இரத்தமும், காயமும், வலியும் , நோயுமாய் வருபவர்களின் நலத்திற்காக பணிபுரிபவர் இந்த செவிலியர்கள். ரோட்டில் ஒருவர் தும்மினாலே மூக்கை மூடும் மக்களின் மத்தியில் வாழ்க்கை முழுவதும் நோயாளிகளினுடன் கழிக்கும் இவர்களைப் பற்றி யோசித்து உண்டா?
எங்களின் தனிப்பட்ட விருப்பம் காரணமாக தான் இந்த மகத்தான பணியை தேர்ந்தெடுத்தோம் மிக சந்தோஷமாக சேவைமனப்பான்மையுடன்.ஆனால் இந்த அர்ப்பணிப்புக்கு கிடைத்த பரிசு கொடிய விமர்சனங்களும் அவமானங்களுமே,மருத்துவமனையிலும் பொதுஇடங்களிலும் நாங்கள் கேட்கும் வசைமொழிகளை உங்கள் உறவினர்களுக்கு என்றால் பாராட்டுவீர்களா ?
உங்களுக்காக அர்ப்பணித்து பணி புரியும் எங்களுக்காக நீங்கள் குரல் கொடுக்க மாட்டீர்களா?
3 - 5 ஆண்டுகள் 5 -8 லட்சம் ரூபாய் செலவு செய்து படித்து தாய் நாட்டில் தலை நிமிர்ந்து வாழ முடியாது அயல்நாட்டில் வாழும் எங்களில் பலரை அறிவீர்களா? இப்போது புரிகிறது சேவையை மட்டும் கொண்டு சாதம் பொங்க முடியாது என்று. ...மாத ஊதியம் ரூபாய் 2500 - 3500 இதில் என்ன செய்ய முடியும் இந்த நிலை நீடித்தால் தமிழகத்தில் அரிதாக காணப்படும் விவசயம் போல செவிலியமும் இருக்கும். நோயாளிகளின் கண்ணீரைத் துடைக்கும் செவிலியர்களின் கண்ணீரைத் துடைக்க ஆளில்லை எனும் போது தான் எங்கள் லட்சியம் உடைகிறது. கேரளாவில் செவிலியர்கள் மருத்துவமனையை புறக்கணித்து போராட்டம் செய்த போது ஏற்ப்பட்ட சிரமங்கள் அனைவரும் அறிந்ததே, ஆனால் அத்தகைய ஒரு போராட்டத்தை நாங்கள் முன்னெடுக்காததற்க்கு காரணம் நம் மக்கள் சிரமப்பட கூடாது என்ற ஒன்றேதான். என்ன கைமாறு இந்த செவிலியர்களுக்கு செய்ய போகிறது இந்த தமிழ்நாடு. செவிலியர்கள் இல்லா மருத்துவமனையை இல்லை ஏன் தமிழகத்தை கற்பனை செய்து பாருங்கள் எங்கள் பங்கு இந்த சமுதாயத்தில் என்ன என்று அறிவீர்கள். மன்னிக்கவும் கடும் சொற்களுக்கு.
இது ஒரு பிரதிபலிப்பே !!!!
- தமிழ்நாடு தனியார் செவிலியர்கள் சங்கமம்
No comments:
Post a Comment