I Support Nursing Now ?
2020 -ம் வருடம் செவிலியர்கள் வருடமாக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது அனைவரும் அறிந்ததே .இதை வரவேற்று பல நாடுகளில் பலவிதமான Hastag and Programs செய்யப்பட்டு Trending ஆக்கப்பட்டது . செவிலியர்களும் செவிலியர்களுக்கு ஆதரவளிப்பவர்களும் இந்த இணைப்பு மற்றும் கூற்றை பிரபல படுத்தினர் ,இது செவிலியர்களுக்கு நல்ல மதிப்பு , பாதுகாப்பு மற்றும் ஊதியங்கள் கொடுக்கும் நாடுகளில் செய்யப்படுவதில் மிக்க மகிழ்ச்சியே .
தற்போது இந்தியாவில் ,குறிப்பாக நம் தாய் தமிழகத்தில் உள்ள செவிலிய அமைப்புகள் மற்றும் பல இதர நிறுவனங்கள் இந்த I Support Nursing Now hastag-ஐ பயன்படுத்தி வருகிறார்கள் . செவிலியர்களுக்கு பயனுள்ள வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் ஏன் மத்திய அரசின் ஊதியமுறையை அமல்படுத்த முயற்ச்சிக்கவில்லை ? அநாகரீகமாக செவிலியர்கள் நடத்தப்படும் போதும் சித்தரிக்கப்படும் போதும் ஏன் உங்கள் சப்போர்ட்டை தரவில்லை ? செவிலிய துறையை யார் வேண்டுமானாலும் இழிவு படுத்தலாம் என்றுள்ள நிலையை மாற்ற ஏன் முயற்சிக்கவில்லை ? நாங்கள் ஒடுக்கப்படும் போது ஒலிக்காத குரல் இப்போது மட்டும்......... .
செவிலியர்களுக்கு உங்கள் ஆதரவு (support) வேண்டாம் என்று சொல்லவில்லை , உங்கள் அனைவரின் ஆதரவும் வேண்டும் ,இன்றுவரை செவிலியர்களுக்காகவும் செவிலியத்துறைக்ககாகவும் பலதரப்பட்ட ஆக்கமும் ஊக்கமும் பல தரப்பட்ட மக்களால் தரப்பட்டுவருவது மிகவும் மகிழ்ச்சியே .
இருப்பினும் உலக சுகாதார அமைப்பின் வெளியீட்டை ஆதரிக்கும் நாம் ஏன் இந்தியா அரசின் நீதிமன்ற ஆணையை ஆதரிக்காமல் புறக்கணிப்பவர்களை ஆராதிக்கிறோம் .
இன்றுள்ள நிலையில் 80% மேலான
செவிலியர்கள் அயல்நாட்டு வேலையை மட்டுமே நம்பி படிக்கிறார்கள் /நகர்கிறர்கள் ,ஏன் இவர்களுக்கெல்லாம் இந்தியாவில் இருக்க பிடிக்கவில்லையா ? இல்லை இந்தியாவில் வாழ முடியவில்லையா ?
"வாழ்கையை நகர்த்த ஊதியமும் இல்லை மானத்தோடு வாழ மரியாதையும் இல்லை "
என்றாவது என் தாய் நாட்டின் நிலை மாறும் சிறப்பாக தாய்நாட்டில் வாழலாம் எனும் கனவோடு பலர் இன்னும் அயல்நாட்டிலும் உள்நாட்டிலும் காத்து இருக்கின்றனர் உங்கள் ஆதரவு இவ்வனைவரின் கனவும் மெய்ப்படும் பொருட்டு அமைந்தால் நிச்சயமாக இவ்வாண்டு 2020 செவிலியர்களுக்கான ஆண்டு .
சிந்திப்போம் மடமை அகல
உதவுவோம் பலர் வாழ
-நன்றியுடன் உங்களில் ஒருவன்